சீன ஏவுகணைச் சோதனை: அமெரிக்கா பெரும் கவலை

அமெரிக்கா, ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் எனும் அதிவேக நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைத் தொடரப்போவதாகத் தெரிவித்துள்ளது.

அண்மையில், சீனா இரண்டு முறை அதேபோன்ற தொழில்நுட்பத்தைச் சோதித்துப் பார்த்தது. அது மிகவும் அக்கறைக்குரியது என்று அமெரிக்க மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு முறையிலிருந்து தப்பிக்கும் தொழில்நுட்பத்தைச் சீனா பரிசோதிக்கிறது என்பதை அது எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின், அதிநவீன ஆயுதச் சோதனை கடந்த வாரம் தோல்வியடைந்ததாகத் தகவல் வெளியானது.

சீனாவும், ரஷ்யாவும் ஆயுதப் போட்டியில் முனைப்பாயிருக்கும் வேளையில், அமெரிக்காவுக்கு அது பின்னடைவாகக் கருதப்படுகிறது.  

இம்மாத ஆரம்பத்தில் சீனாவின் ஏவுகணை சோதனை அமெரிக்க இராணுவத்தை ஆச்சரியப்படுத்தியுள்ளதாக பினான்ஷியல் டைம்ஸ் தெரிவித்திருந்தது.

ஆனால் தாங்கள் எந்த ஏவுகணை சோதனையையும் நடத்தவில்லை, அது விண்கலப் பரிசோதனை என்றே சீனா தெரிவித்துள்ளது.

Fri, 10/29/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை