மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து தீவிர ஆராய்வு

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து தீவிர ஆராய்வு

- ஜனவரியில் சட்ட திருத்தம் சமர்ப்பிக்கவும் தீர்மானம்

மாகாணசபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்குத் தேவையான சட்டரீதியான திருத்தங்களை துரிதமாக மேற்கொள்வதற்கு தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தீர்மானித்தது.

பாராளுமன்ற விசேட குழுக் கூட்டம் அதன் தலைவர் சபை முதல்வர், அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்றது.

மூன்று வருடங்களுக்கு மேலாக மாகாண சபைகள் செயற்படாமல் இருப்பதால் இதுவரை நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற விசேட குழுவில் சுட்டிக்காட்டினார். மாகாண சபைகள் தற்பொழுது ஒருவரினால் நிர்வகிக்கப்படுவது நியாயமானது அல்ல. தற்பொழுது உள்ளூராட்சி மன்றங்களும் பாராளுமன்றமும் செயற்படுகின்றன. மாகாண சபைகள் மாத்திரமே செயற்படாத நிலையில் காணப்படுகின்றன. இதனால் மாகாணசபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நிதி அமைச்சர் வலியுறுத்தினார்.

தற்போதைய நிலையில் பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

Tue, 10/12/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை