புதுக்குடியிருப்பில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு காட்டுப்பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் ஒரு தொகை வெடிபொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம்(28) இரவு இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளையடுத்து, அவ் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, இனங்காணப்படாத 21 குண்டுகள் மற்றும் 60 மில்லிமீற்றர் ரக மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

 

 

Sat, 10/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை