இராணுவத்திற்கு 72 ஆண்டு நிறைவு; 567 அதிகாரிகள் உள்ளிட்ட 10,936 பேர் தரமுயர்வு

இராணுவத்திற்கு 72 ஆண்டு நிறைவு; 567 அதிகாரிகள் உள்ளிட்ட 10,936 பேர் தரமுயர்வு-72nd Army Anniversary-10936 Army Personnel Including 567 Officers Promoted to Next Rank

- இன்று முதல் உடன் அமுல்

இராணுவத்திற்கு 72 ஆண்டு நிறைவு; 567 அதிகாரிகள் உள்ளிட்ட 10,936 பேர் தரமுயர்வு-72nd Army Anniversary-10936 Army Personnel Including 567 Officers Promoted to Next Rankஇலங்கை இராணுவத்தின் 72ஆவது ஆண்டு நிறைவு தினத்தை  முன்னிட்டு 567 இராணுவ அதிகாரிகள் மற்றும் 10,369 படைவீரர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைவாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 72ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று (10) அனுஷ்டிக்கப்படுகின்றது.

2021 ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியான இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, 8 சிரேஷ்ட பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் நிலைக்கும்,17 கேர்ணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 42 லெப்டினன் கேர்ணல்கள் கேர்ணல் நிலைக்கும், 60 மேஜர்கள் லெப்டினன் கேர்ணல் நிலைக்கும், 256 கெப்டன்கள் மேஜர் நிலைக்கும், 10 லெப்டினன்ட்கள்  கெப்டன் நிலைக்கும், 2 ஆம் லெப்டினன்ட்கள் 152 பேர் லெப்டினன் நிலைக்கும், 22 கெடேட் நிலை அதிகாரிகள் லெப்டினன்ட்களமாகவும்  தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

இராணுவத்திற்கு 72 ஆண்டு நிறைவு; 567 அதிகாரிகள் உள்ளிட்ட 10,936 பேர் தரமுயர்வு-72nd Army Anniversary-10936 Army Personnel Including 567 Officers Promoted to Next Rank

விஷேடமாக பிரிகேடியர்களான பிரியந்த வீரசிங்க, அனில் இலங்ககோன், ரொபின் ஜயசூரிய,  சஞ்சய பெனாண்டோ, ரோஹித அலுவிஹார, தினேஷ் நாணயக்கார, லசந்த ரொட்ரிகோ மற்றும் சந்தன விக்ரமசிங்க ஆகியோரே மேஜர் ஜெனரலாக தரம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஸாதிக் ஷிஹான்)

Sun, 10/10/2021 - 13:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை