உயிரிழப்பு 50 இலட்சத்தை அண்மிக்கிறது

உயிரிழப்பு 50 இலட்சத்தை அண்மிக்கிறது-COVID19 Deaths

கொரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 24 கோடியை அண்மித்தது.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு பல தசாப்தங்கள் கூட செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் ஊடாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் நேற்று (14) பகல் 1 மணி வரையில் பின்வருமாறு அமைகிறது.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தற்போது பாதிக்கப்பட்டுள்ளோர் - 23 கோடியே 99 இலட்சத்து 73,258, கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் - 48 இலட்சத்து 90 ஆயிரத்து 017, கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் - 21 கோடியே 73 இலட்சத்து 12,227.

Fri, 10/15/2021 - 08:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை