இலங்கைக்கு உலகவங்கி 500 மில். டொலர் கடனுதவி

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தகவல்

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியை வழங்க உலக வங்கியின் நிர்வாகக் குழு நேற்றுமுன்தினம் (30) அங்கீகரித்ததாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கிராமப்புற சாலை வலையமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய வேளாண்மை சேவைகளை அபிவிருத்தி செய்வதற்காக இந்த கடனுதவி  வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த திட்டம் நெடுஞ்சாலை அமைச்சினால் செயற்படுத்தப்படும் அதேவேளை, இந்த திட்டத்தை கண்காணிக்க தேசிய வழிநடத்தல் குழுவொன்று அமைக்கப்படும்.இந்த கடன் தொகையை 10 வருட சலுகை காலம் உட்பட 28 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

Sat, 10/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை