ஆறு மாத காலப்பகுதியில் 4,743 முறைப்பாடுகள் பதிவு

தினசரி 25 சிறுவர் வரை பாதிப்பு என்கிறார் டளஸ்

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலும், 180 நாட்களில் (6 மாதங்களினுள்) சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,743 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையை 180 ஆல் வகுக்கும்போது, நாளொன்றிற்கு 25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். அதாவது ஒரு மணித்தியாலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை நாளாந்தம் சுமார் 6 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றார்கள் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்தார்.

Wed, 10/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை