சீனாவில் 3ஆவது நகரிலும் பொது முடக்கநிலை அமுல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக சீனா மூன்றாவது நகர் ஒன்றிலும் நேற்று வியாழக்கிழமை பொது முடக்கத்தை அமுல்படுத்தியது.

விரைவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவிருக்கும் நிலையில் சீனா கொரோனா பரவலை முற்றாக கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டியுள்ளது.

சீனாவில் குறைந்தது பதினொரு மாகாணங்களில் புதிய தொற்று சம்பவங்கள் பதிவானபோதும் பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிடுகையில் தொற்று எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. எனினும் நான்கு மில்லியனுக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட லான்சூ நகர் மற்றும் என்ஜின் பிராந்தியங்களில் இந்த வார ஆரம்பத்தில் பொது முடக்கத்தை சீனா அறிவித்தது.

இந்நிலையில் புதிய தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஹெய்லொங்ஜியா மாகாணத்தில் சுமார் ஆறு மில்லியன் மக்கள் வசிக்கும் ஹெய்ஹே நகரில் மக்கள் வீடுகளில் இருக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நேற்று 23 புதிய தொற்று சம்பவங்கள் பதிவானதோடு அது முந்தைய தினத்துடன் ஒப்பிடுகையில் பாதி எண்ணிக்கையாகும்.

Fri, 10/29/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை