35 ஆண்டுகளாகத் தேடப்படும் தொடர் கொலையாளி ஒப்புதல்

பிரான்சின் பாரிஸ் நகர குற்றப் பிரிவினரால் கடந்த பல தசாப்தங்களாக தேடி வந்த பிரபல தொடர் கொலையாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இராணுவ பொலிஸ் அதிகாரியான அந்தக் கொலையாளி மரணிப்பதற்கு முன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 1980கள் மற்றும் 1990களில் பாரிஸ் நகரில் அச்சத்தை ஏற்படுத்திய பிரான்கொயிஸ் வீ என்று பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்தக் குற்றவாளி தற்கொலை செய்துகொள்வதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

பல கொலைகள் மற்றும் கற்பழிப்புச் சம்பவங்கள் தொடர்பில் தொடர் கொலையாளி தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் குறித்த ஆடவரே அந்தத் தொடர் கொலையாளி என்பதற்கான மரபணு சோதனை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் உயிரிழந்திருக்கும் சந்தேக நபரின் ஒப்புதல் பிரான்ஸின் பயங்கர கொலையாளி தொடர்பான வழக்கை முடிவுக்கு கொண்டுவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

1986 ஆம் ஆண்டு பொன்டைனப்லு சிறு நகரில் 11 வயது சிறுமி ஒருவர் கடத்திக் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமே இந்தக் கொலையாளியின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய குற்றச் செயலாக பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்த இந்த கொலையாளி பல கொலை மற்றும் கற்பழிப்புகளில் ஈடுபட்டுள்ளார்.

Sun, 10/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை