சீனாவில் பத்து நாட்களில் 250 பேருக்குக் கொரோனா

சீனாவில் கடந்த பத்து நாட்களில் சுமார் 250 பேரிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள், சீனாவின் வடமேற்கு எல்லைப் பகுதிகளுக்கு அருகிலுள்ள நகரங்களில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த செவ்வாயன்று ஒரே நாளில், அந்நாட்டில் மேலும் 50 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை, கடந்த மாதம் 16ஆம் திகதியிலிருந்து பதிவாகும் அன்றாடத் தொற்றுச் சம்பவங்களுடன் ஒப்புநோக்க, மிக அதிகமாக உள்ளது.

சீனாவில், பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்க, நூறே நாட்கள் எஞ்சியுள்ள வேளையில் சீனா அதன் தனிமைப்படுத்தும் திட்டத்தையும், பரிசோதனைகளையும் விரிவுபடுத்தியுள்ளது.

தற்போதைய தொற்றுச் சம்பவங்களின் அதிகரிப்பு, வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடமிருந்து ஆரம்பித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சிறு நகரங்களில், வைரஸ் தொற்றை எதிர்ப்பதற்குத் தேவையான வளங்கள் குறைவாக உள்ளன. அங்கே, வெளிநாட்டவரிடம் இருந்து தொற்று ஏற்படுவதால் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

அத்தகைய நகரங்கள், வைரஸ் பரவலால் மேலும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குகின்றன.

Thu, 10/28/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை