ஒக். 21ஆம் திகதி முதல் மீண்டும் ரயில் சேவைகள் ஆரம்பம்

ஒக். 21ஆம் திகதி முதல் மீண்டும் ரயில் சேவைகள் ஆரம்பம்-Train Services From October 21

- 130 ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை

மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை எதிர்வரும் 21 ஆம் திகதி நீக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் முதல் 130 ரயில் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க மாகாணங்களுக்குள்ளும் மாகாணங்களுக்கிடையிலும் ரயில் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரயில்வே திணைக்கள அதிகாரி, கண்டி, மாத்தறை,காலி,பெலியத்த மற்றும் சிலாபம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கான அனைத்து முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 10/18/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை