21க்கு முன் கோரிக்கைகளுக்கு பதில் தந்தால் பேச்சுவார்த்தை

இல்லையேல் ஆசிரியர் போராட்டம் தொடரும்

 

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை உபகுழு பரிந்துரை செய்துள்ள சம்பள அதிகரிப்பின் மூன்றில் இரண்டு பங்கை ஒரே தடவையில் பெற்றுத் தந்தால் அதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 21 ஆம் திகதிக்கிடையில் தமது கோரிக்கை களுக்கு தீர்வுபெற்றுக் கொடுத்தால் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கமுடியுமென்றும் அவ்வாறின்றேல் தமது பணி பகிஷ்கரிப்பு தொடரும் என்றும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை உபகுழு பரிந்துரைசெய்துள்ள சம்பள அதிகரிப்பின் மூன்றில் ஒரு பங்கை அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலும் மூன்றில் இரண்டு பங்கை 2023 ஜனவரியிலும் பெற்றுக்கொடுப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஆசிரியர்கள் - அதிபர்கள் சங்கமும் இணக்கம் தெரிவிக்கவில்லை என ஆசிரியர் சங்கம் ஏற்பாடுசெய்த செய்தியாளர் மாநாட்டில் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார்.

சுபோதனி அறிக்கைக்கிணங்க 71 பில்லியன் செலவாகும் அக்குழுவின் யோசனையை நாம் ஒரு பகுதியாக 21 ஆம் திகதிக்கிடையில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமானால் தீர்மானமொன்றுக்கு வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 10/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை