2030ஆம் ஆண்டுக்குள் காசநோய் ஒழிக்கப்படும்

காசநோயை 2030 ஆம் ஆண்டளவில் நாட்டில் முற்றாக ஒழிக்க இலங்கை உறுதி பூண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஆசியாவில் காச நோய் தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் மாநாட்டில் ஸூம் மூலம் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் துறையினர், நகர்ப்புற ஏழைகள், வீட்டு மற்றும் வெளிக்களப் பணியாளர்கள் ஆகியோர் இந்நோயால் பாதிக்கப்படும் அபாயத்திலுள்ளனர் என்பதை வலியுறுத்திய அமைச்சர், இலங்கையில் பல்துறை உத்திகள் மூலம் காசநோயைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையில் வருடாந்தம் சுமார் 8,000 காச நோயாளிகள் பதிவாவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Thu, 10/28/2021 - 10:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை