2020 GCE O/L பரீட்சை மீள் திருத்த விண்ணப்பங்கள் Online மூலம் மாத்திரம்

2020 GCE O/L பரீட்சை மீள் திருத்த விண்ணப்பங்கள் Online மூலம் மாத்திரம்-2020-GCE-AL-Re-Scrutiny-Application-Online-Closing-Date-October-25-2021

- முடிவுத் திகதி ஒக். 25; விண்ணபிக்கும் முறை இணைப்பு
- பாடமொன்றுக்கு ரூ. 200 கட்டணம்

- பாடசாலை அதிபரின் கையொப்பம் அவசியமில்லை

2020 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பங்களை www.doenets.lk மூலம் ஒன்லைன் ஊடாக மாத்திரம் மேற்கொள்ள முடியுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித அறிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஒக்டோபர் 25 என அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் இவ்வருடம் மார்ச் 01ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இடம்பெற்றது.

கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட இப்பெறுபேறுகள் தொடர்பில், மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை, ஒன்லைன் மூலம் மாத்திரம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விண்ணப்பம், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் 'எங்கள் சேவைகள்' எனும் பகுதியில் 'பாடசாலை பரீட்சைகள்' என்பதை கிளிக் செய்வதன் மூலம் குறித்த விண்ணப்பத்தை பெற்று முழுமைப்படுத்துமாறு தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

அத்துடன், பரீட்சைகள் திணைக்களத்தின் கையடக்கத் தொலைபேசி செயலியான 'DoE' ஊடாகவும் இதனை மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான அனைத்து ஆலோசனைகளையும், onlineexams.gove.lk/eic எனும் இணைய முகவரிக்குச் சென்று, அறிந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (இதன்போது பரீட்சார்த்தி தமது ஆளடையாள அட்டையை உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது)

இதற்காக பாடமொன்றுக்கு கட்டணமாக ரூ. 250 அறவிடப்படும் என்பதோடு, அதனை வங்கிக் கடனட்டை அல்லது வரவு அட்டை மூலம் அல்லது தபால் அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்திய பின்னர், அது தொடர்பான சிட்டையை PDF வடிவில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் வழங்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கத்திற்கு SMS தகவலும் அனுப்பி வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீளாய்வு செய்ய வேண்டிய பாடங்கள் உள்ளிட்ட சரியான தகவல்களை முழுமைப்படுத்துவது விண்ணப்பதாரிகளின் பொறுப்பு என்பதோடு, உரிய கட்டணத்தை செலுத்தாத விண்ணப்பங்கள், எவ்வித முன்னறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும். விண்ணப்பத்திற்காக செலுத்தப்படும் கட்டணங்கள் எதுவும் மீளளிக்கப்படாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் தொற்று நிலை காரணமாக, இம்முறை பாடசாலை விண்ணப்பதாரிகளிள் விண்ணப்பங்களில், பாடசாலை அதிபர்களின் பரிந்துரை அல்லது கையொப்பம் அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள்  தகவல்கள் அவசியமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம்.
பாடசாலை பரீட்சைகள் பிரிவு
0112785231/ 0112785216
0112784037
உடனடி தொலைபேசி இலக்கம் - 1911

மும்மொழியிலான அறிவுறுத்தல் வருமாறு

Thu, 10/07/2021 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை