பாகிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம்; சுமார் 20 பேர் பலி

பாகிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம்; சுமார் 20 பேர் பலி-Pakistan-Baluchistan-Earthquake

- சுமார் 150 பேர் காயம்; பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட 5.7 - 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹார்னாய் பகுதியை மையமாக கொண்டு, இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இவ்வனர்த்தத்தில், அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் அதிர்ந்து நொறுங்கியதால் அதற்குள் சிக்கியவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்வனர்த்தத்தில் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணி நடந்து வருகின்றன.

Thu, 10/07/2021 - 08:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை