இன்று நாட்டின் 20 மாவட்டங்களில் 172 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 20 மாவட்டங்களில் 172 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-Vaccination-at-172-Centers-20-Districts-October-06-2021

- பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் தடுப்பூசி

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (06) நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 172 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் வெள்ளிக்கிழமை (15) இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பல்கலைக்கழக மாணவர்கள் தாம் வசிக்கும் பிரதேசங்களுக்கருகிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று உரிய அடையாள அட்டைகளைக் காண்பித்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நேற்று (05) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (06) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

Wed, 10/06/2021 - 10:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை