ஏழை நாடுகளுக்கு கொவிட்-19 மாத்திரை வழங்க உடன்பாடு

அமெரிக்காவின் மெர்க் மருந்துத் தயாரிப்பு நிறுவனம் புதிய உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. கொவிட்-19 நோய்த்தொற்றுக்குச் சிகிச்சையளிக்கும் மாத்திரைகளை ஏழை நாடுகளுக்குப் பரவலாக விநியோகம் செய்ய அது வழியமைக்கும்.

வைரஸ் பரவல் ஆரம்பித்ததில் இருந்து முதன்முறையாக, நடுத்தர, குறைந்த வருமானம் கொண்ட 105 நாடுகள், மோல்னுபிரவீர் மாத்திரைகளை விரைவில் பெறவிருக்கின்றன.

இலேசானது முதல் மிதமானது வரை கொவிட்-19 அறிகுறியுடன், மருத்துவமனையில் சேர்க்கப்படாதவர்களுக்கு அந்த மாத்திரை மூலம் சிகிச்சையளிக்கலாம். அவர்கள் முதுமை அல்லது நீரிழிவு போன்றவற்றால் அதிக அபாயத்தை எதிர்நோக்கக்கூடியோராகவும் இருக்கலாம்.

அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியக் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் மோல்னுபிரவீர் மாத்திரைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

கொவிட்-19 நோய், சர்வதேச பொதுச் சுகாதார நெருக்கடியாக வகைப்படுத்தப்படுவது தொடர்ந்தால், புதிய உடன்பாட்டின்படி, மெர்க் நிறுவனத்துக்கு விற்பனைக்கான காப்புரிமத் தொகை கிடைக்காது. 

Fri, 10/29/2021 - 14:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை