கொவிட்-19 தோற்றத்தை கண்டறிய இறுதி முயற்சி

கொவிட்-19 வைரஸ் தொற்று எவ்வாறு உருவெடுத்தது என்பது பற்றி கண்டறிவதற்கான இறுதி முயற்சியாகப் புதிய பணிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சாகோ என அழைக்கப்படும் பணிக் குழுவில் இடம்பெற 26 நிபுணர்களை அது முன்மொழிந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் ஒன்றரை ஆண்டுக்கு முன் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டது. ஆனால் அது எவ்வாறு தோன்றியது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

வூஹான் நகர் சந்தைகளில், அந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியதா அல்லது, ஆய்வுக்கூடம் ஒன்றில் இருந்து அது கசிந்ததா என்பது பற்றி பணிக்குழு ஆராயவுள்ளது.

ஆய்வுக்கூடம் ஒன்றிலிருந்து வைரஸ் கசிந்திருக்கலாம் எனும் சாத்தியத்தை சீனா மறுத்து வருகிறது. கடந்த பெப்ரவரி மாதம், உலக சுகாதார அமைப்பின் குழு ஒன்று அந்த வைரஸ் வௌவால்களிடம் இருந்து பரவியிருக்கலாம் எனக் கூறியிருந்தது.

Fri, 10/15/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை