18-19 வயது மாணவருக்கு பைசர் தடுப்பூசி வழங்கல்

இன்று முதல் முழுநாட்டுக்கும் விஸ்தரிப்பு

 

நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள 18 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கடந்த வாரம் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 18 –- 19 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் அந்த செயற்பாடுகள் மிகவும் சாத்தியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கிணங்க இன்று முதல் அந்த செயற்பாடுகளை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் சிறுவர் நோய் தொடர்பான விசேட மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சாமன் ரவீந்ரஜித் தெரிவிக்கையில்:

கொழும்பு மாவட்டத்தில் ஆரம்ப முன்னோடி நடவடிக்கையாகவே கடந்த வாரம் 18 –- 19 வயதுடைய மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்பட்டது. அது சாத்தியமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் நாட்டின் ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் அந்த நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகளில் கல்வியமைச்சு, சுகாதார அமைச்சு, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு, குடும்ப சுகாதாரப் பிரிவு ஆகியன இணைந்து செயற்படவுள்ளன. அந்தவகையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக அனுப்பி ஒத்துழைக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொள்வ

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 10/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை