ஷியா பள்ளிவாசலில் குண்டுத் தாக்குதல்: 16 பேர் பலி

ஆப்கானின் கந்தஹார் நகரில் உள்ள ஷியா பள்ளிவாசல் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டு மேலும் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

இமாம் பர்கா பள்ளிவாசலிலேயே இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பள்ளிவாசல் ஜன்னல்கள் சோதமடைந்து, உடல்கள் தரையில் வைக்கப்பட்டிருக்கும் படங்கள் வெளியாபியுள்ளன.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் உடன் கண்டறிக்கப்படாதபோதும் தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

காயமடைந்த வழிபாட்டாளர்கள் அருகில் இருக்கும் மிர்வைஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய அரசுக் குழுவின் உள்ளூர் கிளையான ஐ.எஸ்.-கே இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு கந்துஸ் நகரில் இருக்கும் ஷியா பள்ளிவாசலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.-கே குழு பொறுப்பேற்றது.

Sat, 10/16/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை