16-19 வயதுக்குட்பட்ட மாணவருக்கு இன்று தடுப்பூசி

16-19 வயதுக்குட்பட்ட மாணவருக்கு இன்று தடுப்பூசி-COVID Vaccination for 16-19 Years

நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களில் ஒரு தரப்பினருக்கு இன்று (22) முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, தாம் கல்வி கற்கும் பாடசாலைகளில் இவ்வாறு Pfizer தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இத்தகவலை தெரிவித்தார்.

Fri, 10/22/2021 - 07:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை