நாடளாவிய ரீதியில் 16 - 19 வயதுடையவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி

Vaccination Drive for 16-19 Year Old Begins from October 22

- இன்று நாட்டின் 23 மாவட்டங்களில் 247 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இலங்கையின் கொவிட்-19 தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, 16, 17, 18, 19 வயது பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாளை (22) முதல் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இம்மாணவர்களுக்கு Pfizer தடுப்பூசி வழங்கப்படுமெனவும், தடுப்பூசி வழங்குவது தொடர்பில், ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கான முன்னுரிமையை அந்தந்த பாடசாலையினால் தீர்மானிக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (21) நாடு முழுவதும் 23 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 247 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதேவேளை நேற்று (20) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (21) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

Thu, 10/21/2021 - 11:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை