குளவி கொட்டுக்கு இலக்கான 15 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

குளவி கொட்டுக்கு இலக்கான 15 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்-Wasp Attack-15 Hospitalized

நோர்வூட் பொலிஸ் பிரிவிலுள்ள ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் 15 தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் நேற்று தேயிலைக் கொழுந்துகளைப் பறித்துக்கொண்டிருந்த போது தேயிலைத் தோட்டத்தின் பெரிய மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூட்டை பருந்து ஒன்று தாக்கியதில் கூடு கலைந்து குளவிகள் தாக்கியதாகத் தெரியவருகிறது.

குளவித் தாக்குதலுக்குள்ளான ஐந்து பெண்கள் மட்டுமே டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளதாகவும் காயமுற்ற ஏனையோர் மருத்துவமனை யிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் பெருந்தோட்ட அதிகாரசபை தெரிவித்துள்ளது.

டி.சந்ரு

Thu, 10/14/2021 - 08:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை