1400 வருடங்கள் கடந்தும் முழு உலகும் போற்றும் உத்தமர் நபி

கலாநிதி ஹஸன் மௌலானா மீலாதுன் நபி வாழ்த்து

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மனிதநேயத்தை இந்த உலகத்துக்கு போதித்ததோடு அதன்படி வாழ்ந்தும் காட்டியதால் 1400 வருடங்கள் கடந்தும் முழு உலகமும் போற்றும் உத்தமராக நபி பெருமானார் ஸல் திகழ்கின்றார்கள் என பிரதமரின் முஸ்லிம் சமய கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல் - காதிரி தெரிவித்துள்ளார். மீலாதுன் நபி தினத்தையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இன, மத பேதங்களுக்கப்பால் மனிதநேயத்தை இந்த உலகத்துக்கு போதித்ததோடு அதன்படி செயலிலும் வாழ்ந்து காட்டினார். அதன்விளைவாகவே 1400 வருடங்கள் கடந்தும் முழு உலகமும் போற்றும் உத்தமராக நபி பெருமானார் ஸல் திகழ்கின்றார்கள். அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்கள் அன்னாரின் வழிகாட்டல்கள், போதனைகளை உரிய ஒழுங்கில் பின்பற்றி நடந்தால் இலங்கையிலும் உலகெங்கிலும் பரிபூரணமிக்க மனிதநேயராக வாழமுடியும்.

இஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ முஸ்லிம் தலைவர்கள் அன்னாரைப் பரிபூரணமாகப் பின்பற்றி நடந்ததால் இன்றும் போற்றிப்புகழப்படுகிறார்கள். நாமும் இந் நன்நாளில் முஹம்மது ஸல் அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் என்பவற்றை முழுமையாக பின்பற்றி உலகை வெற்றிபெற்ற நல்ல மனிதர்களாக வாழ்ந்து வரலாறு படைக்கலாம். இலங்கையில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் பௌத்தம், இந்து, கிறிஸ்தவம் ஆகிய சமூகங்களுடன் ஒற்றுமையாகவும் சகவாழ்வு புரிந்துணர்வுடனும் சாந்தி சமாதானத்துடனும் வாழ்ந்திட இந் நன்நாளில் திடசங்கற்பம் பூணுவோம்.

இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த இந் நன்நாளன்று இலங்கை உட்பட முழு உலகிலும் வாழும் சகல மக்களும் சாந்தி சமாதானத்துடன் வாழ பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

 

Tue, 10/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை