ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 125 ரூபாவுக்கு

சந்தைப்படுத்தவுள்ளதாக அறிவிப்பு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்தவாரம் முதல் சதொச ஊடாக இந்த அரிசி விநியோகம் இடம்பெறும் என அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் மீண்டும் அரிசிக்கான கட்டுப்பாட்டு  விலை அறிவிக்கப்படுமா என்பது தொடர்பாக இப்போதைக்குக் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Sat, 10/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை