12 வயதுக்கு மேற்பட்ட மாணவருக்கு வருட இறுதிக்குள் தடுப்பூசி

இவ் வருட இறுதிக்குள் 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசியை வழங்கி அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து நாட்டை முழுமையாகத் திறக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கொவிட்-19 தொற்றால் நாட்டில் சுற்றுலா மற்றும் கைத்தொழில்கள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதால் நாட்டின் வருமான மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

Sat, 10/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை