அசாத் சாலிக்கு நவம்பர் 09 வரை விளக்கமறியல்!

நீடித்து உத்தரவிட்டது நீதிமன்றம்

 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின்  விளக்கமறியலில் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு ஷரீஆ சட்டம் குறித்து அவர் வெளியிட்ட கருத்து இன முரணப்பாட்டை ஏற்படுத்துவதாக தெரிவித்து மார்ச் 16 ஆம் திகதி சி.ஐ.டி.யினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.இந்நிலையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரை மீண்டும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Wed, 10/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை