மூத்த பத்திரிகையாளர் W.G. குணரத்ன காலமானார்

லேக்ஹவுஸ் நிறுவனத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் டபிளியூ.ஜி.குணரத்ன காலமானார்.

இளம் பத்திரிகையாளராக லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்த இவர் லேக் ஹவுஸில் புலனாய்வு செய்தி பிரிவின் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.

1994ஆம் ஆண்டு தினமின பத்திரிகையின் செய்தி ஆசிரியர் பதவி வகித்த குணரத்னவுக்கு பொய்யர்கள் மற்றும்  மோசடி செய்பவர்களை எதிர்ப்பதே அவரது கொள்கையாக இருந்தது. டபிளியு.ஜி.குணரத்ன சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நிபுணராக இருந்தார். இவர் கடைசிவரை ஒரு நேர்மையான ஊடகவியலாளராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 09/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை