ரஷ்யாவிடமிருந்து மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் V

அடுத்த வாரம் இலங்கை வருகிறது

தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் எதிர்வரும் வாரம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்க வுள்ளதாக மருந்துப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இத்தடுப்பூசிகளில் ஒரு தொகை கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ்  வழங்குவதற்கு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் இரண்டாவது டோஸ் பெற்றுக்கொள்ள காத்திருக்கும் நபர்களுக்கு ஒரு தொகையையும் மேலும் ஒரு தொகையை மற்றய பிரதேசங்களுக்கு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்புட்னிக் V கொரோனா வைரஸ் தடுப்பூசி ரஷ்யா வின் உற்பத்தி என்பது குறிப்பிடத்தக்கது.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 09/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை