பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் MRI செயலிழப்பு; விசாரணைக்கு அமைச்சர் கெஹலிய உத்தரவு

பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான எம்.ஆர்.ஐ பரிசோதனைக் கருவி செயலிழந்துள்ளமைக்குக் காரணத்தைக் கண்டறியுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்தக் கருவி 2006ஆம் ஆண்டு வைத்தியசாலைக்கு கிடைத்ததாகவும், இது 2017ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்ததாகவும் வைத்தியாசலையின் பணிப்பாளர் டொக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.

MRI கருவி செயலிழந்த நிலையில் உள்ளதால், ஏழு மாகாணங்களைச் சேர்ந்த பிள்ளைகள் தொடர்பிலான சோதனைகளை நடத்த முடியவில்லை எனவும் பணிப்பாளர் கூறியிருக்கிறார்.

எம்.ஏ. அமீனுல்லா

 
Thu, 09/16/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை