உலகவங்கி, IMF உள்ளிட்ட அமைப்புகளுடன் அரசு பேச்சு

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புக்களை சீர்செய்வதற்காக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார மட்டத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசிய பொருள் இறக்குமதி மற்றும் சேவை விநியோகத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனை அரசாங்கத்தின் தவறான முகாமைத்தும் என கருத முடியாது.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய நாட்டை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் எதிர்க்கட்சியினர் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்கான அனைத்து செயற்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினர்.

கொவிட்19 தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பு என்பதால் அரச ஊழியர்களது மாத சம்பளம் குறைக்கப்படவில்லை.

அத்துடன் அரசினால் வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவுகளும் இடை நிறுத்தப்படவில்லை.

அனைத்து கொடுப்பனவுகளும் உரிய காலத்தில் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 09/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை