Future Science Prize சீன விருது வென்ற பேராசிரியர் மலிக் பீரிஸ்

Future Science Prize சீன விருது வென்ற பேராசிரியர் மலிக் பீரிஸ்-Professor Malik Peiris Won China's Future Science Prize-2021

- ஒரு மில்லியன் டொலர் பணப்பரிசும் பகிர்ந்தளிப்பு

பேராசிரியர் மலிக் பீரிஸ் சீனாவின் 'Future Science Prize' விருதை வென்றுள்ளார்.

SARS, MERS தொடர்பான ஆராய்ச்சிக்காக, 2021 'Future Science Prize' விருது அவருக்கு வழங்கப்படுவதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

 

 

பேராசிரியர்களான மலிக் பீரிஸ் மற்றும் Yuen Kwok-yung ஆகியோர் இணைந்து இவ்விருதை வென்றுள்ளதாக, தூதரகம் விடுத்துள்ள ட்விற்றர் இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு மில்லியன் டொலர் பரிசும் அவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் விஞ்ஞான ஆய்வுகள், புத்தாக்கம் தொடர்பில் ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தனியார் அறக்கட்டளையே  'Future Science Prize' விருதாகும்.

Mon, 09/13/2021 - 07:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை