இராணுவத்தினரால் உடுப்பிட்டியில் புதிய வீடொன்றுக்கு அடிக்கல்

இராணுவத்தினரால் உடுப்பிட்டியில் புதிய வீடொன்றுக்கு அடிக்கல்-Army Lays Foundation Stone for a House to a Low Income Family

குறைந்த வருமானம்‌ பெறும்‌ குடும்பங்களுக்கு வீடமைத்து வழங்கும்‌ திட்டத்தின்‌ மற்றுமொரு, அத்தியாயமாக புதிய வீடொன்றை அமைப்பதற்கு நேற்றையதினம் (11) 551ஆவது படையணியின்‌ படைத்‌ தளபதி பிரிகேடியர்‌ சிந்தக விக்ரமசிங்கவினால்‌ அடிக்கல்‌ நடப்பட்டது.

யாழ்ப்பாண பாதுகாப்பு படை கட்டளை தளபதியின்‌ ஆலோசனைக்கும்‌ வழிகாட்டலுக்கும்‌ அமைவாக உடுப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவருக்காக அமைக்கப்படவுள்ள இந்த புதிய வீடானது, யாழ்ப்பாண பாதுகாப்பு படை கட்டளை தளபதி ஜகத் கொடிதுவக்குவின்‌ ஆலோசனைக்கும்‌ வழிகாட்டலுக்கும்‌ அமைவாக, குமார வீரசூரியவின் ஒருங்கிணைப்பிலும்‌ நன்கொடையாளர்‌ ஒருவருடைய நிதி உதவியுடனும்‌ அமைக்கப்படவுள்ளது.

இராணுவத்தினரால் மற்றுமொரு புதிய வீடொன்றுக்கு அடிக்கல்-Army Lays Foundation Stone for a House to a Low Income Family

இவ்‌வீட்டுத்திட்டமானது 551ஆவது படையணியின்‌ மேற்ப்பார்வையில்‌ 4ஆவது சிங்க ரெஜிமேந்து வீரர்களின்‌ உழைப்பில்‌ உருவாக்கப்படவுள்ளது.

நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் சுகாதார விதிமுறைகளைப் பேணி வீட்டின் உரிமையாளரின் சமய அனுஷ்டானங்களைப் பேணி இவ்வடிக்கல்‌ நடும்‌ நிகழ்வு இடம்பெற்றது.

Sun, 09/12/2021 - 10:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை