உணவுப் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் கிடையாது

வதந்திகளை நம்ப வேண்டாம்; அரசு அறிவிப்பு

நாட்டில் அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும் மக்களின் தேவைகளுக்கு போதுமானளவு அத்தியாவசியப் பொருட்கள் உள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான உணவுப் பொருட்கள் அரசிடம் உள்ளது. நாட்டில் கடுமையான உணவுப் பற்றாக்குறை இருப்பதாக சில உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களும் சமூக ஊடகங்களும் செய்திகளை பரப்பிவருகின்றன. இந்த செய்திகள் எவ்வித அடிப்படைத்தன்மையும் அற்றவையாகும். உணவுப் பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மக்கள் உணவுப் பற்றாக்குறையாகுமென பயப்பட வேண்டாம் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 09/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை