படைகளை வாபஸ் பெறுவதற்கு எதிராக பைடனுக்கு ஆலோசனை

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புகளைத் தொடர்ந்து வைத்திருக்குமாறு ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக அமெரிக்க உயர் இராணுவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த மாதம், ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்களை அவசரமாக வெளியேற்றியது தொடர்பில் நடத்தப்பட்டுள்ள விசாரணையில் அவர்கள் அவ்வாறு கூறினர்.

அமெரிக்க பாராளுமன்றத்தில் சுமார் 6 மணிநேரத்துக்கு விசாரணை நடத்தப்பட்டது.

2,500 வீரர்களை அங்கே வைத்திருக்குமாறு ஜனாதிபதியை அறிவுறுத்தியதாக ஜெனரல் மார்க் மில்லி, ஜெனரல் ப்ரான்க் மெக்கன்ஸி இருவரும் கூறினர்.

ஆனால் அவ்வாறு ஆலோசனை பெற்றதாகத் தமக்கு நினைவு இல்லை என ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் மாத இறுதிக்குள், அமெரிக்கத் துருப்பினரை முற்றிலும் வெளியேற்ற ஜனாதிபதி பைடன் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தார்.

அது குறித்து, அவருக்கு மாறுபட்ட ஆலோசனை வழங்கப்பட்டதாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் ஜென் சாக்கி கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு தொடர்ந்த போரை முடிவுக்குக் கொண்டுவர, அப்போது ஜனாதிபதி பைடன் முடிவெடுத்ததாகத் சாக்கி தெரிவித்தார்.

 

Thu, 09/30/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை