தாமதமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள்

டாக்டர் ஹேமந்த ஹேரத்

எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் மட்டுப்படுத்தப்படலாம் என்பதால், தாமதமின்றி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்படும் நடமாடும் தடுப்பூசி திட்டம் எதிர்காலத்தில் கிடைக்காமல் போகலாம் என பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

அதற்கு பதிலாக, தடுப்பூசி நடவடிக்கை குறைந்த எண்ணிக்கையிலான நிலையங்களில் நடத்தப்படும் என்றும் மேலும் இந்த செயன்முறை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை உறுதியாக கூறமுடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஒரு வருடத்திற்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசியை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஏற்கனவே விவாதம் இடம்பெற்று வருவதாக ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். மூன்றாவது தடுப்பூசியை வழங்கும் செயற்பாட்டினை ஆரம்பித்தால் முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்கான நேரம் இருக்காது என்பதனால் இவற்றினை கருத்திற்கொண்டு விரைவில் தடுப்பூசி செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Wed, 09/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை