நீர்கொழும்பு கடலில் காணாமல்போன மூன்று மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு கடற்பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் (28) நள்ளிரவில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மூன்று மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (29) காலை சடலம் மீட்கப்பட்டு நீர்கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது. கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் போருத்தொட்டை பிரதேசத்தை சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்ட மீனவராவார்.

கொழும்புத் துறைமுகத்துக்கு அண்மித்ததாக சடலம் மீட்கப்பட்டுள்ளது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை காணாமல்போன மற்றய இரு மீனவர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக மீனவர்கள் நேற்று மதியம் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு கடற்கரைதெரு மற்றும் குடாபாடு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே காணாமல்போன மீனவர்களாவர். இவர்களில் ஒருவர் படகின் உரிமையாளராவார்.

நீர்கொழும்பு தினகரன் நிருபர்

 
Thu, 09/30/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை