‘மூ’ கொரோனா திரிபு பற்றி கண்காணிப்பு

உலக சுகாதார அமைப்பு ‘மூ’ எனப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் திரிபை கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

B.1.621 ரக தொற்று வகை முதலில் கொலம்பியாவில் ஜனவரியில் கண்டறியப்பட்டது. மூ கொரோனா திரிபு, பல முறை உருமாறக்கூடும் என்றும்,

அதை எதிர்த்து தடுப்பூசிகளின் செயல்திறன் குன்றியிருக்கக்கூடும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது.

இருப்பினும் புதிய வகை வைரஸ் பற்றி மேலும் அறிந்துகொள்ள இன்னும் கூடுதலான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அது குறிப்பிட்டது.

உலக சுகாதார அமைப்பு தற்போது 4 அவதானத்திற்குரிய கொரோனா திரிபு வகைகளை அடையாளம் கண்டுள்ளது.

அதில் ஒன்றான ஆல்பா 193 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மற்றொன்று டெல்டா வகை திரிபு. அது 170 நாடுகளில் பரவியுள்ளது.

மூ உள்ளிட்ட இதர 5 வகைக் கொரோனா திரிபுகள் கண்காணிக்கப்படுகின்றன.

எனினும் உலக அளவில் பதிவான வைரஸ் தொற்றுச் சம்பவங்களில் அது 0.1 வீதத்திற்கும் குறைவே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Thu, 09/02/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை