நிவ்பிகொக் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்

30 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் பாதிப்பு

கடும் மழை காரணமாக புஸ்சல்லாவ நிவ்பிகொக் தோட்டத்தில் மண்சரிவு அபாய நிலைமை எற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். புஸ்சல்லாவ நிவ்பிகொக் தோட்டத்தில் என்.பி பிரிவிலுள்ள இலக்கம் 26 ஆவது லயன் குடியிருப்பு தாழ் இறங்கி வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் 30 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளுக்கு உள்ளே நீர் வருவதாகவும், கூரை தகரங்கள் உடைந்து காணப்படுவதாகவும் மக்கள் அங்கலாய்கின்றனர்.

மழை பெய்யும் போது அதிலும் மழைநீர் வீட்டுக்குள் வருவதால் இரவு நேரத்தில் உறங்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

இதனால் சிறுவர்கள் உட்பட முதியோர், குடும்ப உறுப்பினர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பலதடவை தோட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அரசியல்வாதிகளும் வரவில்லை எனவும் கூறுகின்றனர்.

அத்தோடு 2014 ஆம் ஆண்டு கடும் மழை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்ட போது நான்கு நாட்கள் பாடசாலையில் தங்கவைத்து, வீடு கட்ட காணிகள் தருவதாக கூறி இன்று வரை ஏமாற்றி வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்

 
Thu, 09/09/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை