பாராளுமன்றம் இன்று காலை கூடுகிறது

பாராளுமன்றம் இன்று (21) காலை 10.00 மணிக்கு கூடுகிறது. கலால் கட்டளையின் கீழ் அறிவிப்பு, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டத்தின் கீழ் 05 விதிமுறைகள் , விசேட வர்த்தகப் பண்ட வரி சட்டத்தின் கீழ் 06 விதிமுறைகள், அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் மூன்று உத்தரவுகள், அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் கட்டுப்பாடு மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டம் இன்று (21) விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன..

காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடிய பிறகு, பாராளுமன்ற உறுப்பினர்களால் வாய்மொழி மூலமான கேள்விகளுக்குபதில் அளிக்கப்படும் . கேள்விகளுக்கு காலை 11.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவாதம் காலை 11.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும், சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் மாலை 4.30 மணி முதல் மாலை 4.50 மணி வரை நடைபெறும். நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை (திருத்தம்) மசோதா (இரண்டாவது வாசிப்பு) மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு கட்டளை ஆகியவை விவாதத்திற்குப் பிறகு 22 ஆம் திகதி (நாளை) நிறைவேற்றப்பட உள்ளன. (பா)

 

Tue, 09/21/2021 - 08:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை