செய்தியாளர்களை சவுக்கால் அடித்து தாக்கிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் போராட்டங்களை படமாக்க முயன்ற செய்தியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்களுடன் செய்தியாளர்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

எடிலாட்ரோஸ் என்ற செய்தித்தாள் நிறுவனத்தின் இரு செய்தியாளர்கள் போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்றபோது தலிபான்களால் கைது செய்யப்பட்டனர்.

தான் ஒரு மாவட்ட காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு தம்மை அவர்கள் அடித்து உதைத்ததாகவும் தகி தர்யாபி என்ற செய்தியாளர் தெரிவித்தார். தம்மை தலிபான்கள் தடியாலும் மின்சாரக் கேபிள்களாலும், சவுக்காலும் அடித்ததாக அவர்கள் கூறுகின்றனர். சில மணி நேரம் கழித்து எந்த விளக்கமும் இல்லாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டபோது, “தலை துண்டிக்கப்படாதது உன் அதிர்ஷ்டம்” என்று தலிபான்களில் ஒருவர் கூறியிருக்கிறார். கடந்த இரு நாட்களில் குறைந்தது 14 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருப்பதாக சி.பி.ஜே என்ற பன்னாட்டு அரசு சாரா அமைப்பு கூறியுள்ளது.

 

Sat, 09/11/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை