அனைத்து நடவடிக்கைகளிலும் தேசிய மொழிகளுக்கு முன்னுரிமை

அரசியலமைப்பு உறுதியை பின்பற்றல் அவசியம்

நாட்டின் பிரதான தேசிய மொழிகளான தமிழ், சிங்கள மொழிகளுக்கு அனைத்து நடவடிக்கைகளிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,  இலங்கையின் பிரதான தேசிய மொழிகளாக தமிழ், சிங்கள மொழிகள் சட்டப்பூர்வமாக்கப்படுள்ளதை அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது. அதன்படி, அரச நிறுவனங்கள், சட்டரீதியான நிறுவனங்கள், நெடுஞ்சாலை அறிவித்தல் பலகைகள், போக்குவரத்து சேவைகள் போன்ற அத்தியாவசிய பொது சேவைகள், பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இது செல்லுபடியாகும்.

எனினும், உயர் நீதிமன்றத்தால் ஆங்கிலத்தில் மட்டுமே தீர்ப்புக்களை வெளியிடுவது பெரும்பாலும் சிக்கலுக்குரியதென்றும் ஆங்கில மொழி சரியாக தெரியாத பெரும்பாலான மக்களுக்கு அது அநீதியானதெனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச அணுகல், வெளிநாட்டுக் கல்வி மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்புக்கு ஆங்கிலம் இன்றியமையாதது மற்றும் முக்கியமானது என்றும், ஆனால் அது இலங்கையில் தேசிய மொழிகளுல் ஒன்றல்ல என்றும் ஆங்கிலம் ஒருங்கிணைக்கும் மொழி மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் உரிய தீர்ப்புகளை வெளியிடும் போது சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் வெளியிடுவது மிகவும் முக்கியம் என்றும் அவ்வாறு மேற்கொள்வது இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் சமூக ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துமெனவும் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டார்.

Sat, 09/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை