வடமத்திய மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன விண்ணப்பக்கால எல்லை நீடிப்பு

இஷாக் எம்.பியின் வேண்டுகோளையடுத்து நடவடிக்கை

வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அண்மையில் கோரப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதியாக ஆகஸ்ட் 31 அறிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் முடக்க நிலை காரணமாக அநேகமான பட்டதாரிகளுக்கு குறித்த விண்ணப்பங்களை இறுதி திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து வட மத்திய மாகாண பட்டதாரிகள் சிலர் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

தலைவரும், காணி அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேன, வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தேஜானி திலகரத்ன ஆகியோருடன் ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு தொடர்பில் நேற்று முன்தினம் (30) தொலைபேசி ஊடாக கலந்துரையாடினார்.

அதனடிப்படையில் வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. புதிய விண்ணப்ப முடிவுத்திகதி வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களினால் இன்னும் சில தினங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

Wed, 09/01/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை