தாளையடி உப தபாலகம் தபாலகமாக தரமுயர்வு

ஆவணங்களை கையளித்தார் அமைச்சர் நாமல்

உப தபாலகமாக இயங்கி வந்த தாளையடி உப தபாலகம் வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் முயற்சியினால் தரமுயர்த்தப்பட்டுள்ளது. தரமுயர்தப்பட்ட தாளையடி தபால் நிலையத்துக்கான ஆவணத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, வடமாகாண பிரதி தபால் மாஅதிபர் திருமதி மதுமதி வசந்தகுமாரிடம் (09) கையளித்தார். யாழ் மாவட்டத்துக்கான களவிஜயத்தை மேற்கொண்ட இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நேரடியாக பார்வையிட்டதன் பின்னர் இந்த நிகழ்விலும் கலந்துகொண்டார்.

 

Sat, 09/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை