அதிவேக ஏவுகணை சோதனை: உறுதி செய்தது வட கொரியா

அதிவேக ஏவுகணைகளை கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 28) சோதனை செய்ததை வட கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.

வடக்கில் உள்ள ஜாகாங் மாநிலத்திலிருந்து ஹ்வாசொங்-8 எனும் அந்த ஏவுகணை பாய்ச்சப்பட்டதாக அந்நாட்டின் அரசாங்க ஊடகமான கே.சி.என்.ஏ கூறியது.

சீனாவின் ஜீலின் மாநிலத்துடனான எல்லைப் பகுதியில் அந்த மாநிலம் அமைந்துள்ளது.

ஐந்து ஆண்டு இராணுவ மேம்பாட்டுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட மிக முக்கிய ஐந்து புதிய ஆயுத முறைமைகளில் ஒன்றாக இந்த புதிய ஏவுகணை உள்ளது என்று அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஏவுகணை “மூலோபாய ஆயுதம்” என்று குறிப்பிட்டுள்ளது. அணு ஆயுதத் திறன் படைத்த ஆயுதங்களையே வட கொரியா இவ்வாறு கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடுமையான தடைகளுக்கு மத்தியிலும் வட கொரியா தமது ஆயுதத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருவதையே கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆயுத சோதனை காட்டுகிறது.

இந்த புதிய ஏவுகணைச் சோதனை மூலம் வட கொரியா இந்த மாதத்தில் மூன்று ஏவுணைச் சோதனைகளை நடத்தியுள்ளது.

Thu, 09/30/2021 - 07:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை