பிரான்ஸுக்கான நேரடி விமான சேவை ஆரம்பம்

நாட்டின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவை நவம்பர் முதலாம் திகதி முதல் பிரான்ஸின் பாரிஸ் நகரத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகர சார்ள்ஸ் டீ கோல் விமான நிலையத்தை நோக்கி வாரத்திற்கு மூன்று சேவைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி நிறுவனம் நேற்றைய தினம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க 269 ஆசனங்களைக் கொண்ட சாதாரண வகுப்பு மற்றும் 28 எகோனமிக் ஆசனங்களை உள்ளடக்கிய A 330-300 ஆம் இலக்க விமானம் மேற்படி சேவைக்காக உபயோகப்படுத்தப்பட உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்படி விமானம் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மூன்று வாரத்திற்கு ஒரு முறை என்ற வகையில் இரவு நேரத்தில் பிரான்ஸ் நோக்கி புறப்படும் என்றும் மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்படி விமானம் மறுநாள் காலை 7.30 மணிக்கு பரிஸிலுள்ள உள்ள சார்ள்ஸ் டீ கோல் விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளதுடன் அன்றைய தினமே பிற்பகல் இரண்டு முப்பது மணிக்கு பாரிசிலிருந்து இலங்கைக்கு புறப்பட உள்ளது. அந்த விமானம் மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் எனவும் அந்த நிறுவனத்தின் தலைவர் அசோக பதிரகே தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை பாரிசுக்கான தமது விமான சேவையை நிறுத்தியுள்ள நிலையில் 2020ஆம் ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் தற்காலிகமாக சில பயணிகள் மற்றும் பொருட்கள் சேவைளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 09/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை