கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் புதிய சாதனை

விலைச்சுட்டெண் 9163.13 புள்ளியாக பதிவு

 

அனைத்து பங்கு விலைச்சுட்டெண் நேற்று (01) கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. அதன் உயர்ந்த மதிப்பை நேற்று அது பதிவு செய்துள்ளது. நேற்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,163.13 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. முன்னதாக 2021 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி அனைத்து பங்கு விலைச்சுட்டெண் உயர்ந்த மதிப்பை பதிவு செய்திருந்ததுடன் இதன்போது 8,920.71 புள்ளிகளாக அனைத்து பங்கு விலைச்சுட்டெண் பதிவாகி இருந்தது.

நேற்றைய மொத்த புரள்வு 14.56 பில்லியன் ரூபாவாக பதிவாகியது.

Thu, 09/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை