நயினாதீவு உற்சவம் இவ்வருடம் இல்லை

யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம், இவ்வருடம் நடைபெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.  வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய, வருடாந்த மஹோற்சவம் கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவிருந்தது. கொவிட் 19 தொற்று அச்சம் காரணமாக செப்ரெம்பர் 06 ஆம் திகதிக்கு திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.

தற்போதும் நாட்டில் கொவிட் 19 தொற்றுப் பரவல் அதிகரித்துச் செல்வதால், முன்னர் ஒத்திவைக்கப்பட்டதைப் போன்று இம் மாதம் 06ஆம் திகதி மஹோற்சவத்தை நடத்த முடியாத நிலை தோன்றியுள்ளதாக நயினாதீவு ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர். இதனால் இவ் வருட மஹோற்சவம் கொவிட்19 தொற்றுப் பரவல் அதிகரித்துச் செல்வதால், நடைபெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

யாழ். விசேட நிருபர்

Thu, 09/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை