இறக்குமதி செய்யப்படும் அரிசி நியாய விலையில் மக்களுக்கு!

விரைவில் நடக்கும்; அது அரசின் பொறுப்பு

அரிசியை இறக்குமதி செய்து, நியாயமான விலைக்கு மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதய நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் உடனடியாக அரசியை இறக்குமதி செய்ய  உள்ளது. அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படும்.

இறக்குமதி செய்யும் இந்த அரிசி தொகை கிடைத்த பின்னர், 100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் நுகர்வோருக்கு ஒரு கிலோ அரிசியை கொள்வனவு செய்ய முடியும்.

நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாது என்றால், சந்தைக்கு அரிசி விநியோகிக்கப்படுவது குறைக்கப்படுமாயின் அரசாங்கம் அதில் தலையிட நேரிடும்.

அரிசியை இறக்குமதி செய்து, நியாயமான விலைக்கு மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. இதனால், அதனை சரியாக செய்து. ஒரு இலட்சம் மெற்றி தொன் அரியை இறக்குமதி செய்யவுள்ளோம். அரிசி மாஃபியா, ஆலை உரிமையார்கள் நுகர்வோரை சுரண்டி சாப்பிட இடமளித்து விட்டு வேடிக்கை பார்க்க தயாரில்லை என்றார்.

 

Thu, 09/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை