உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி கலாபூஷணம் சிதம்பரநாதன் காலமானார்

உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி   சிதம்பரநாதன் நேற்றுக் காலமானார்.  அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வர வித்துவான் சிதம்பரநாதன்,  தவிற்காரர் செல்லத்துரையின்  மகனாவார். இவர் தமது நாதஸ்வரக் கலையைக் கும்பழாவளை ஆலயத்தில் இளமைப்பருவத்திலேயே ஆரம்பித்தார். இவருடைய தந்தையாரும் கும்பழாவளை ஆலயத்தில் தவிற்கலையில் ஈடுபட்டிருந்தவர். தந்தையாருடன் இணைந்து கலைத்தொண்டு பேணிய இவர் நாதஸ்வரக் கலையில் மிக நாட்டங் கொண்டவராக விளங்கினார். அக் காலத்தில் பிரபல நாதஸ்வரக் கலைஞராகவிருந்த மாவிட்டபுரம் இராசாவிடம் சாஸ்திர ரீதியில் நாதஸ்வரம் பயின்றார்.

அதன் மேல் இந்தியாவுக்குச் சென்று பிரபல வித்துவான்களிடம் நாதஸ்வரப் பயிற்சி பெற்றார்.

இவர் தமது மாமனாராம் தவிற் கலைஞர் கணேசரத்தினத்தின் வழிகாட்டலில் வருடந் தோறும் அவர் அழைப்பின் பேரில் அவருடன் வந்து தங்கும் வெளியூர்க் கலைஞர்களிடமும் இசைப் பயிற்சி பெற்றார். இவருக்கு இசைத் துறையிற் கேள்வி ஞானம் பெற்றுயர மாமனார் கணேசரத்தினத்தின் உதவி பெரிதும் பயன் பட்டது. நாதஸ்வரக் கலையரசு பத்மநாதன் ஒரு இசைக்குழுவை அமைத்து பயன் பெரிதும் பெற்றது போல இவரும் தாமாக ஒரு இசைக் குழுவை அமைத்தார். அக்குழுவில் தமது சகோதரனாகிய சிவகுருநாதனையும் இணைத்து பல வருடங்களாக இசைக்கலையை நன்கு வளர்த்தார். இவர் விடாமுயற்சியும் கடின உழைப்பும் உள்ளவராதலினால் இவர் முன்னேற முடிந்தது. நாதஸ்வர இளந்தென் றல் என்ற பட்டத்தை இவர் தமது இளமைக்கா லத்திலேயே பெற்று விட்டார். வயது வந்து பெருங் கலைஞராக மாறியபோது இவருக்கு நாதஸ்வரகானவாருதி என்ற பட்டங்கிடைத்தது. இவர் தமிழர் வாழும் நாடுகளிலெல்லாம் பிர பல இசை மேதையாகக் கணிக்கப்பட்டார். இலங்கை அரசாங்கத்தினால் வழங் கப்படும் கலைஞர்களுக்கான கலாபூஷண விரு தினையும் சிதம்பரநாதன் பெற்றுக்கொண் டார். இவரது மகன் இளவல் ஜலதரன் வயலின் வாத்தியக் கருவியை இந்திய இசைக்கல்லூரிகளில் கற்று இன்று பலராலும் பாராட்டப்படும் இசை நிகழ்வுகளை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Sat, 09/04/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை